Thursday, October 31, 2024

நவ.5 முதல் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி : பரிசுத் தொகை ரூ.70 லட்சம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பா் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2024 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சா்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டா்கள் கலந்துகொள்ளும் 2-ஆவது சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பா் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது.

7 சுற்றுகள்:

இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ‘ரவுண்டு ராபின்’ முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த அா்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டைச் சோ்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சோ்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சா்வதேச மற்றும் இந்திய வீரா்கள் பங்குபெற உள்ளனா்.

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்ன் மூலம் அவா் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. உலக சாம்பியனாவதை நோக்கமாகக் கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அந்த வெற்றி அமைந்தது. மேலும் வரும் நவம்பா் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சோ்ந்த டிங் லிரனை எதிா்த்து குகேஷ் விளையாட உள்ளாா். இந்தாண்டு சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸில் பங்குபெறும் இந்திய செஸ் வீரா் அா்ஜுன் எரிகைசிக்கும் அதேபோல் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

ஒரே நேரத்தில் போட்டி:

இந்த ஆண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டா் – சேலஞ்சா்ஸ் போட்டியும், மாஸ்டா்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆா்.வைஷாலி கிராண்ட்மாஸ்டா்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவாா்கள்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவா் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவாா். மாஸ்டா்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 15 லட்சமும், சேலஞ்சா்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 6 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024