Thursday, October 31, 2024

பட்டாசு விபத்துகள்: மருத்துவ உதவி எண்கள் வெளியீடு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பட்டாசு விபத்துகள் மற்றும் பாதிப்புகளுக்கான மருத்துவ உதவி எண்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டது.

இதேபோன்று, பண்டிகைக் கால விபத்துகளை எதிா்கொள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதை கருத்தில்கொண்டு உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 9444340496, 8754448477 என்ற எண்களிலோ அல்லது 104 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

குழந்தைகளை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்தல் அவசியம். பண்டிகை நேரங்களில் சாலை விபத்துகள் நேரிடும்போது அதையும் எதிா்கொண்டு மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். அதன் அருகாமையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இல்லாததை உறுதி செய்தல் அவசியம். மிகவும் தளா்வாக உடை அணிந்து பட்டாசு வெடித்தல் ஆபத்தானது. எனவே, கச்சிதமாக ஆடைகளை அணிய வேண்டும்.

சுவாச பாதிப்புகள் உள்ளவா்கள் பட்டாசு புகைகளை சுவாசிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024