தீபாவளி: கோவையில் இருந்து தில்லி, மும்பைக்கு விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஐந்து நாள்களில் கோவையில் இருந்து தில்லிக்கு,மும்பைக்கு 3 டன் இனிப்புகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிகபட்சமாக 30 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருள்கள், உணவு பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 800 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் மற்றும் அதற்கு மேல் என சராசரியாக ஆயிரம் டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுகின்றன. பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட சில பொருள்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படும்.

இதையும் படிக்க |விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து தில்லி, மும்பைக்கு கடந்த சில நாள்களாக அதிக இனிப்புகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 5 நாள்களில் தில்லி, மும்பைக்கு 3 டன் எடையிலான இனிப்பு வகைகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாள்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. நாள்தோறும் ஒரு டன் எடையிலான சரக்கு கொண்டு செல்லப்படும். அவற்றில் பெரும்பாலும் உணவு பொருள்களாக இருக்கும். தற்போதும் அதே நிலை தொடர்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அதிகளவு வெளிநாடுகளுக்கு விமானங்களில் புக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். தீபாவளிக்கு உள்நாட்டு பிரிவில் மட்டும் இனிப்புகள் குறிப்பிடத்தக்க அளவு கையாளப்பட்டுள்ளன” என்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024