Friday, November 1, 2024

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தேர்வு; ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தேர்வு; ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தேர்வில் ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை. இளநிலை பொறியாளர் பணிக்கு 26 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் 99, ஓவர்சீயர் 69 என மொத் தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருந்தது. தாள்-1ல் 98 மதிப்பெண்கள், தாள்-2ல் 96 மதிப்பெண்கள் என மொத்தமாக 194 மதிப் பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது.

அந்த வகையில், குறைந்தபட்ச மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 30 சதவீதம் என்ற வகையில் 194க்கு 58.20 மதிப் பெண்ணும், எம்பிசி, ஒபிசி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம் 25 சதவீதம் என்ற வகையில் 48.50 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் 20 சதவீதம் என்ற வகையில் 38.80 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவு- 4, எம்பிசி-6, ஒபிசி-10. எஸ்சி-5, இபிசி-1 என 26 பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் இளநிலை பொறியாளர் (சிவில்) பதவிக்கு 26 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பிரதீப்குமார் என்பவர் 62.19 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், பிரியதர்ஷினி என்பவர் 60.56 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடத்தையும், பிரதீப் என்பவர் 60.07 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இளநிலை பொறியாளர் பதவியில் மீதமுள்ள காலி பணியிடங்களுக்கும். ஓவர்சீயர் பதவிக்கும் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை. ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர்கூட தேர்வாகவில்லை.

தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்புக் கான அட்ட வணை பொதுப்பணித்துறை மூலம் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த தகவலை அரசுச் செயலரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024