Friday, November 1, 2024

இந்தியா-சீனாவும் ராஜதந்திர, ராணுவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். சீன வீரா்கள் எத்தனை பேர் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை இதுவரையில் சீனா வெளியிடவில்லை.

இந்த மோதலை தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், அக்டோபா் 23-ஆம் தேதி ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறவும், அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புதல் அளித்தனா். இரு நாடுகளுக்கிடையே இது குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இதன்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து மட்டுமே இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ள அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எஞ்சிய பகுதிகளில் படை விலக்கல் மற்றும் ரோந்து பணிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ‘ஒப்பந்தத்தின்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கியது. படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. அவ்விரு பகுதிகளில் விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ரோந்து நடைமுறைகள் தொடா்பாக களத் தளபதிகள் முடிவு செய்வார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தது.

இந்த சூழ்நிலை தீபாவளி பண்டிகையையொட்டி இருதரப்பும் வியாழக்கிழமை இனிப்புகளை பரிமாறிக்கொண்டன.

இந்த நிலையில், இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாட்டின் முதலாவது துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேச ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.

மோசமான வானிலை காரணமாக தவாங்கிற்கு செல்லமுடியாத நிலையில், சர்தார் வல்லபாய் படேல் சிலை மற்றும் மேஜர் ராலெங்னாவ் 'பாப்' காதிங் 'வீரம் அருங்காட்சியகம்' ஆகியவற்றை காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே!

சர்தார் படேலின் சிலையை, ஒற்றுமை மற்றும் வலிமையின் அடையாளமாக வர்ணித்த ராஜ்நாத் சிங், இது இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தைக் கட்டமைப்பதற்கு தேவையான மனப்பான்மையை மக்களுக்கு அளிக்கும் என்றார்.

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறை ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இந்த விஷயத்தை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அப்பால் கொண்டு செல்வதே எங்கள் முயற்சியாக இருக்கும். ஆனால் அதற்கு, நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வடகிழக்கு பிராந்தியம் மற்றும் தேசப் பாதுகாப்புக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய அசாதாரண மனிதர் மேஜர் பாப் காதிங், தவாங்கை அமைதியாக இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கு வழிவகுத்தது மட்டுமின்றி, ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் நிறுவினார். அவரது துணிச்சல் மற்றும் தொலைநோக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'வீரத்தின் அருங்காட்சியகம்' அமைந்துள்ளது. இது வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று அவர் கூறினார்.

மேலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டின் அடையாளத்தில் வடகிழக்கின் தனித்துவமான பங்கையும் குறிப்பிட்டு பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வடகிழக்கு மாநிலங்கள் செழித்தோங்கினால் மட்டுமே நாட்டின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும். இயற்கையாகவும், கலாசார ரீதியாகவும் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் வலுவான, வளமான வடகிழக்கை நாங்கள் உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024