நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை.
மும்பை,
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரே மாற்றமாக பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பும்ரா இடம்பெறாததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை" என்று பதிவிட்டுள்ளது.
UPDATE: Mr Jasprit Bumrah has not fully recovered from his viral illness. He was unavailable for selection for the third Test in Mumbai.#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) November 1, 2024
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, பண்ட், சர்பராஸ் கான், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), கான்வே, வில் யங், ரச்சின் ரவிந்திரா, டேரில் மிச்செல், டாம் பிளண்டெல், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்ரி, அஜாஸ் படேல் மற்றும் வில்லியம் ஓ ரூர்க்.