இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இதையும் படிக்க : சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்! ரெய்னா சூசகம்
இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்கிய நிலையில், 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் டேரல் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.