அபிஷேக் பச்சான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு, விவாகரத்தை நோக்கிச் செல்வதாக ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில், நவ. 1ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.
அபிஷேக் பச்சான் – ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்வாதாகவும், பல முக்கிய நிகழ்ச்சிகளில் இரு தரப்பும் தனித்தனியே வருவதும் பங்கேற்பதையும் அடிப்படையாக வைத்து, சமூக வலைதளங்களில் அவர்கள் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்களது திருமண வாழ்க்கை குறித்து இருதரப்பும் இதுவரை பொது வெளியில் வாய் திறக்கவே இல்லை.
அண்மையில் நடந்த மிகப் பிரபலமானவரின் திருமணத்தில் கூட, அபிஷேக் தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் பங்கேற்க, ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் தனியாக வந்து பங்கேற்றனர். இதனால், ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருந்த விவாகரத்து புரளி எனும் தீயில், நெய் விட்டது போல ஆனது.
இதற்கிடையே, பல செய்திகள் இருவரது உறவு குறித்து வெளியாகி வந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி, ஐஸ்வர்யா ராய் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஆனால், அபிஷேக் பச்சானோ அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருமோ ஒரு வாழ்த்துச் செய்தியும் வெளியிடவில்லை. இதனால், ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் பலரும் விவாகரத்து புரளியை உண்மை என கவலையடைந்துள்ளனர்.