சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் .
வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறிந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் .
குறிப்பாக, சென்னை அகரம், ஜெகந்நாதன் சாலையில் விரைவில் முதல்வர் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகம் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க |பாசிசத்துக்கு எதிரான வெனிசுவேலா மாநாட்டில் பங்கேற்க எம்.பி.க்கு அனுமதி மறுப்பு!
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட அதிகாரிகளிடத்தில் ஆலோசனை வழங்கினார். மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் ஓட்டுநர்களின் ஓய்வு அறை மற்றும் கழிவறைகளை நேரில் சென்று பார்த்தபோது அங்கு கழிவறையின் அருகே சமையல் செய்வதற்கான காய்கறிகளை ஓட்டுநர்கள் நறுக்கிக் கொண்டிருந்ததை பார்போது பார்த்ததும் அதனை கண்டித்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல குழு அதிகாரி திருமுருகன் மற்றும் மாதவரம் மண்டல அதிகாரிகளும் பேருந்து நிலைய அதிகாரிகளும் உடன் இருந்தனர்.