56
கிரீஸ் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
புதுடெல்லி,
கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:" ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் உள்ளது. கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசுடன் ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா-கிரீஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்." என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து கிரீஸ் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு ஆசியாவின் முன்னேற்றங்கள் உள்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.