அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கச்சார் மாவட்டத்தின் லைலாபூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் 30 சோப்பு பெட்டிகளில் இருந்து 375 கிராம் ஹெராயின் மற்றும் 20,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என கூறப்படுகிறது. அந்த வாகனத்தின் டிரைவரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.