Wednesday, November 6, 2024

கனமழையால் குன்னூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கனமழையால் குன்னூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குன்னூரில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சாலையில் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்றிரவு கனமழை கொட்டியது. பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேல் பாரத் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மண் சரிந்தது. காரை மண் குவியலில் இருந்து பொதுமக்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் மீட்டனர். மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய ரயில் ரத்து: உதகையில் பரவலாக கனமழை பெய்து வருவதால், மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: குன்னூர் அருகே கூர்க்கா ஹில் பகுதியில் நேற்று மாலை கார் மீது மரம் ஒன்று விழுந்தது. அதில் பயணித்த குன்னூர் ஸ்டேன்லி பார்க் பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன்(43) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றி உடலை மீட்டனர்.

வெலிங்டன் பெரக்ஸ் பகுதியில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றி வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை ‌கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மரங்கள் வெட்டப்படாத நிலையில் நேற்று இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. உயிரிழந்த ஜாகீர் உசேனுக்கு மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளார்.

மாவட்டத்தில் மழை அளவு; இன்று காலை 7 மணி வரையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மழையளவு மி.மீ.,ல்)

  • கீழ் கோத்தகிரி எஸ்டேட் -143
  • கோத்தகிரி -138
  • அலக்கரை எஸ்டேட்- 137
  • அடார் எஸ்டேட் -125
  • பர்லியார்- 123
  • பில்லிமலை எஸ்டேட் -118
  • குன்னுார் -105
  • கோடநாடு- 67
  • கெத்தை- 54
  • கின்னக்கொரை -48
  • சாம்ராஜ் எஸ்டேட் -44
  • கேத்தி -42
  • பந்தலுார் -41
  • உதகை- 37.7
  • குந்தா பாலம்- 28
  • அவலாஞ்சி- 21
  • எமரால்டு- 19
  • அப்பர் பவானி- 13

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024