மகாராஷ்டிரத்தில் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் டிஜிபி ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மகாராஷ்டிர தலைமைச் செயலாளருக்கு சுக்லாவின் பொறுப்பை அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
மேலும் டிஜிபியாக நியமனம் செய்ய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் புகார்களைத் தொடர்ந்து டிஜிபி ராஷ்மி சுக்லா அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.
இதையும் படிக்க: திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு! 2 மாணவிகள் மயக்கம்
சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது கட்சி சார்பற்றவர்களாக உணரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.
கடந்த அக்டோபர் 29 அன்று குமார், மகாராஷ்டிரத்தில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றங்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான தடையை உறுதி செய்யுமாறு டிஜிபி சுக்லாவிடம் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 12 அன்று பாந்த்ரா கிழக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.