Wednesday, November 6, 2024

ஏரியில்கூட தாமரை மலரக்கூடாது: அமைச்சர் சேகர் பாபு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

போரூரில் உள்ள பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, ஏரியில்கூட தாமரை மலரக்கூடாது என அதிகாரிகளிடம் கிண்டலடித்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டுத் திடல், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி திடல், வாகன நிறுத்தங்கள், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க: கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்

அப்போது அதிகாரிகளிடம், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இதில் கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்தும் சில பரிந்துரைகளையும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அத்துடன் அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரை பூக்களை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குளத்தில்கூட தாமரை மலரக் கூடாது என கிண்டலாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024