Thursday, November 7, 2024

அடுத்த வாரம் வெளியாகிறது சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிக்கான அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும், தற்போது உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இத்தாலிய வீரர்!

பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு முன் இந்திய அரசுடனான ஆலோசனைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபியின் போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மார்ச் 10 அன்று ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும்.

கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. லாகூரில் இறுதிப் போட்டி உள்பட ஏழு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கராச்சியில் தொடக்கப் போட்டியும், அரையிறுதி போட்டியும் நடைபெறுகிறது. ராவல்பிண்டியில் மற்றொரு அரையிறுதிப் போட்டியும் லீக் சுற்றுக்கான ஐந்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்தியா ஏ அணியினர் பந்தை சேதப்படுத்தினார்களா? நடுவர்கள் மீது வார்னர் ஆவேசம்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அட்டவணை

  • பிப்ரவரி 19: நியூசிலாந்து – பாகிஸ்தான் (கராச்சி)

  • பிப்ரவரி 20: வங்கதேசம் – இந்தியா (லாகூர்)

  • பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா (கராச்சி)

  • பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து (லாகூர்)

  • பிப்ரவரி 23: நியூசிலாந்து – இந்தியா (லாகூர்)

  • பிப்ரவரி 24: பாகிஸ்தான் – வங்கதேசம் (ராவல்பிண்டி)

  • பிப்ரவரி 25: ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து (லாகூர்)

  • பிப்ரவரி 26: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)

    டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ரிஷப் பந்த், கில் முன்னேற்றம்! விராட் கோலி, ரோகித்துக்கு சரிவு!
  • பிப்ரவரி 27: வங்கதேசம் – நியூசிலாந்து (லாகூர்)

  • பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா (ராவல்பிண்டி)

  • மார்ச் 1: பாகிஸ்தான் – இந்தியா (லாகூர்)

  • மார்ச் 2: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து (ராவல்பிண்டி)

  • மார்ச் 5: முதலாவது அரையிறுதி (கராச்சி)

  • மார்ச் 6: 2-வது அரையிறுதி (ராவல்பிண்டி)

  • மார்ச் 9: இறுதிப்போட்டி (லாகூர்)

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024