0
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,063 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (நவ.7) காலை 106.92 அடியில் இருந்து 106.81 அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,929 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,063 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |சென்னையில் பரவலாக மழை!
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 73.94 டிஎம்சியாக உள்ளது.