Friday, November 8, 2024

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை, திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று(நவ. 8) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் கே.ஏ.பால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 'மனுதாரரின் கோரிக்கையை செயல்படுத்தினால் அனைத்து கோயில்கள், குருத்வாராக்களுக்கு தனி மாநிலங்களை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட மதத்திற்கென தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று எங்களால் கூற முடியாது' என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீர்: பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

முன்னதாக, திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு போன்ற கலப்படங்கள் இருந்ததாகக் கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.

இதுதொடா்பாக, தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ கடவுளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது’ என்று முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், லட்டு கலப்பட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிபிஐ இயக்குநா் கண்காணிப்பில் 5 நபா் கொண்ட சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது.

சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில் 5 நபா் கொண்ட இந்தக் குழுவில் சிபிஐ தரப்பில் இரு அதிகாரிகள், மாநில காவல் துறை தரப்பில் இரு அதிகாரிகள், மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தரப்பில் ஒரு அதிகாரி இடம்பெற்றுள்ளனா்.

லட்டு கலப்பட குற்றச்சாட்டை விசாரிக்க ஆந்திர அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 9 போ் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றாக இந்தப் புதிய குழு செயல்படவுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024