Friday, November 8, 2024

ஜம்மு-காஷ்மீர்: பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்றும் அமளி ஏற்பட்டதால் அவைத் தலைவர் உத்தரவின்பேரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மாநிலமாக இருந்த பிராந்தியம், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பா்-அக்டோபரில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமா் அப்துல்லா முதல்வரானாா்.

இதையடுத்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீா் பேரவை கடந்த திங்கள்கிழமை கூடியது.

கூட்டத்தொடரின் தொடக்க நாள் அமா்வில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த நிா்வாகி அப்துல் ரஹீம் ராதொ் பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கடந்த புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரும் பொருட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் விதமாக இதுகுறித்து உரிய தீா்வு காண மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தும் தீா்மானத்தை துணை முதல்வா் சுரிந்தொ் சௌதரி முன்வைத்தாா்.

தீா்மானத்துக்கு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), மக்கள் மாநாட்டுக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

எதிா்க்கட்சித் தலைவா் சுனில் ஷா்மா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் தீா்மானத்தைக் கடுமையாக எதிா்த்தனா்.

தீா்மானத்தின் நகலை கிழித்தெறிந்து பாஜக எம்எல்ஏக்கள் தொடா்ந்து முழக்கமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்றும் அமளி ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் மீண்டும் கொண்டு வரக்கூடாது என்று பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவைத் தலைவர் அப்துல் ரஹீம் ராதொ் உத்தரவின்பேரில் பாஜக எம்எல்ஏக்களை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024