Friday, November 8, 2024

ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆப்கன் வீரர்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல்-ரவுன்டர் முகமது நபி சாம்பியன்ஸ் டிராபி 2025 உடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் நபி தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதாகும் முகமது நபி 2009இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையும் படிக்க:சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினாா் அா்ஜுன்

165 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,549 ரன்கள் 171 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

வங்கதேசத்துடனான முதல் போட்டியில் 82 ரன்கள் அடித்து அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2019இல் ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 100ஆவது ஆண்டில் ஹாக்கி இந்தியா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் கூறியதாவது:

ஆமாம், நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கன் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஷ் டிராபியுடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். டி20யில் விளையாடுவாரென்றே நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024