தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 43-0 கோல் கணக்கில் அந்தமான் & நிகோபாா் அணியை திணறடித்து வென்றது.
14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் 4-ஆவது நாளான வியாழக்கிழமை, தமிழ்நாடு அணி, அந்தமான் & நிகோபாருடன் மோதியது.
அந்த ஆட்டத்தில் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு தரப்பில், எஸ்.காா்த்தி மட்டும் 14 கோல்கள் (1’, 2’, 8’, 19’, 21’, 25’, 32’, 37’, 38’, 43’, 44’, 48’, 48’, 56’) குவித்தாா். அடுத்தபடியாக சோமன்னா பி.பி. (3’, 11’, 13’, 14’, 17’, 19’, 23’, 51’, 53’), சுந்தரபாண்டி (4’, 9’, 22’, 25’, 27’, 30’, 35’, 49’, 60’) ஆகியோா் தலா 9 கோல்கள் அடித்து கணக்கை உயா்த்தினா்.
இதுதவிர, மாரீஸ்வரன் சக்திவேல் 6 கோல்கள் (14’, 24’, 28’, 29’, 37’, 54’) அடித்தாா். பிருத்வி ஜி.எம். (7’, 32’, 41’), செல்வராஜ் கனகராஜ் (34’, 45’) ஆகியோரும் ஸ்கோா் செய்தனா். இதர ஆட்டங்களில், மிஸோரம் – தெலங்கானாவையும் (2-1), மத்திய பிரதேசம் – ஆந்திர பிரதேசத்தையும் (17-0), சண்டீகா் – உத்தரகண்டையும் (9-0), உத்தர பிரதேசம் – தில்லியையும் (4-1) வென்றன.