Saturday, November 9, 2024

கங்குவா படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சென்னை,

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் புரமோசன் பணிகளில் 'கங்குவா' படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பதற்காக வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, பாக்கி தொகையை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் நேற்று விசாரித்தார். அப்போது ரிலையன்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், 'ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் ரூ.18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட எதிர்ப்பு இல்லை' என்றார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024