Friday, September 20, 2024

விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

மேற்கு வங்க ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன் ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர்…

— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 17, 2024

You may also like

© RajTamil Network – 2024