Saturday, September 21, 2024

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

கால அவகாசம் அளிக்காமல், உரிய ஆலோசனைகளை பெறாமல் அவசர கதியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை.3 குற்றவியல் சட்டங்களிலும் தவறுகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024