ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்காட்லாந்து – சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டம் ‘டிரா’

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் மெக்டொமினே கோல் அடித்தார். இதனால் ஸ்காட்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஷகிரி பதில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என 'டிரா'வில் முடிந்தது.

You may also like

© RajTamil Network – 2024