Friday, September 20, 2024

வெப்ப அலையால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க ஜே.பி.நட்டா உத்தரவு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயிலும், வெப்ப அலையும் மக்களை அதிகமாக வாட்டி வருகிறது. இதனால் வெப்ப வாதம் உள்ளிட்ட பல்வேறு கோடைகால நோய்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக வட இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.) தெரிவித்துள்ளது. மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் தொடரும் என்றும், அதன் பிறகு படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு தயாராக உள்ளன? என்பது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா அதிகாரி்களுடன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், அதிகரித்து வரும் வெப்ப அலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024