இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மர்மசாவு: தற்கொலையா..? போலீஸ் விசாரணை

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜூட் ஜான்சன் என்கிற டேவிட் ஜான்சன்(வயது 52). இவர், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனகஸ்ரீ லே-அவுட் எஸ்.எல்.வி. பாரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் டேவிட் ஜான்சன் வசித்து வந்தார். நேற்று காலை 11.15 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து டேவிட் ஜான்சன் கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் டேவிட் ஜான்சனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தற்கொலை செய்தாரா?

இது குறித்து கொத்தனூர் போலீசார் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 4-வது மாடியின் பால்கனியில் இருந்து டேவிட் ஜான்சன் கீழே விழுந்து உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்து பலியானாரா? என்பது மர்மமாக உள்ளது. சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக டேவிட் ஜான்சன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர், 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட் ஜான்சனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேவிட் ஜான்சன் கடந்த 1971-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி பிறந்தார். கடந்த 1996-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் அணியில் டேவிட் ஜான்சனுக்கு இடம் கிடைத்தது. இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை அவர் எடுத்திருந்தார். 1996-ம் ஆண்டு இந்திய அணியில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற பெருமையை டேவிட் ஜான்சன் பெற்றிருந்தார். மேலும் 39 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை டேவிட் ஜான்சன் எடுத்திருந்தார்.

You may also like

© RajTamil Network – 2024