சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்

by rajtamil
0 comment 40 views
A+A-
Reset

விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 49 ஆக அதிகரித்துள்ளது . மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராய உயிரிழப்பு குறித்து சட்டசபையில் விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டசபை தொடங்கிய நிலையில் விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன.தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.அதன்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்

You may also like

© RajTamil Network – 2024