கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சருடன் இன்று சந்திப்பு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த அமைச்சர்கள் இன்று முதல்-அமைச்சரை சந்தித்து கள நிலவரங்களை விளக்க உள்ளனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அவர்கள் முதல்-அமைச்சரை இன்று நேரில் சந்தித்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பான கள நிலவரங்களை விளக்க உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024