பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

பழனி,

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இது வெளியூர் பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.

இந்த ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024