Saturday, September 21, 2024

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புடிகே சிவகுமார்

டிகே சிவகுமார்

நீட் தேர்வுக்கு தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகா அரசும் கைகோர்த்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்தியா நுழைவுத் தேர்வான நீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஒருபக்கம் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மற்றொரு புறம், குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நீட் எழுதிய 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் தந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று பூதாகரமாகி உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்
மருத்துவப் படிப்புகளுக்கு மாநிலங்களே நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க:
‘ஆடுதாம் ஆந்திரா’ நிகழ்ச்சியில் ரூ.100 கோடி முறைகேடா? – முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு புதிய சிக்கல்!

கர்நாடகா அரசு கட்டும் கல்லூரிகளில் சொந்த மண்ணை சேர்ந்த மாணவ, மாணவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டிய டி.கே.சிவக்குமார், நீட் முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கடினமாக உழைத்து நீட் எழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
DK Shivakumar
,
Karnataka

You may also like

© RajTamil Network – 2024