Saturday, September 21, 2024

டிராபிக் போலீசாருக்கு ‘கூலிங் ஜாக்கெட்’ – இனி வெயிலே தெரியாது

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

டிராபிக் போலீசாருக்கு ‘கூலிங் ஜாக்கெட்’ – எவ்வளவு வெயில் அடித்தாலும் குளுகுளுவென இருக்குமாம்!கூலிங் ஜாக்கெட்டுகளுடன் போலீசார்

கூலிங் ஜாக்கெட்டுகளுடன் போலீசார்

கொளுத்தி எடுக்கும் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு நிவாரணியாக குளிர்விக்கும் ஜாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்கள் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக ஹரியானாவில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வெயிலுக்கு மத்தியில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்விக்கும் ஜாக்கெட்டுகளை, ஹரியானா காவல்துறை வழங்கி உள்ளது.

இந்த ஜாக்கெட்டுகள் சிறிய மின்விசிறிகள், கூலிங் பேட்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக இந்த ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குருகிராம் போக்குவரத்து துணை ஆணையர் சுக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இந்த ஜாக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள சிறிய அளவிலான விசிறிகள் சுமார் 5 மணி நேரம் வரை ஒரு சார்ஜிங்கில் ஓடக் கூடியது. இதன்பின்னர் இவற்றை சார்ஜிங் செய்து பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஏதேனும் மின் கசிவு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஜாக்கெட்டுகள் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று போக்குவரத்து காவலர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த மன்பூல் சிங் என்பவர் கூறுகையில், இந்த ஜாக்கெட்டுகள் மிகவும் கனமாக உள்ளன. இதனால் இவற்றை அணியும்போது நமக்கு அசவுகரியம் ஏற்படும்.

விளம்பரம்இதையும் படிங்க – 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் முழு பட்டியல் – இதோ…

ஜாக்கெட்டில் வைக்கப்பட்டுள்ள ஐஸ் அட்டைகள் 2 மணி நேரத்தில் முற்றிலுமாக ஆவியாகி விடும். மேலும், இந்த கூலிங் ஜாக்கெட்டுகள் மேல் உடலை மட்டும்தான் குளிர்விக்கும். இடுப்புக்கு கீழே வெப்பநிலை அதிகம் இருக்கும் என்பதால் உடலில் மாறுபட்ட வெப்பம் காணப்பட்டு, பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க – இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு!விளம்பரம்

இதற்கு முன் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அகமதாபாத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
haryana
,
Traffic Police

You may also like

© RajTamil Network – 2024