Saturday, September 21, 2024

பதவியேற்பு விழா மேடையில் சிரஞ்சிவி காலில் விழுந்த பவன் கல்யாண்…

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பதவியேற்பு விழா மேடையில் சிரஞ்சிவி காலில் விழுந்த பவன் கல்யாண்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!பதவியேற்பு விழாவின்போது பவன் கல்யாண்

பதவியேற்பு விழாவின்போது பவன் கல்யாண்

ஆந்திராவிற்கே துணை முதலமைச்சராக ஆனாலும் , அண்ணன் சிரஞ்சீவிக்கு என்றும் பாசமுள்ள தம்பிதான் என்பதை தனது செய்கையின் மூலம் உணர்த்தினார் பவன் கல்யாண்.

ஆந்திராவின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பவன் கல்யாண், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த விழா மேடையிலேயே பிரதமர் மோடி, துணை முதலமைச்சராக உயர்ந்த பவன் கல்யாண் மற்றும் அவரது சகோதரர் சிரஞ்சீவியை ஒன்றாக அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

விளம்பரம்

தொடர்ந்து மேடையில் இருந்த நடிகர்கள் ரஜினிகாந்த், பாலையாவிடமும் பிரதமர் நலம் விசாரித்தார்.பதவியேற்பதற்கு முன்பாக மேடையில் இருந்த விஐபிக்களின் வாழ்த்துக்களை பெற்ற பவன் கல்யாண் தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றறுக் கொண்டார்.

National Leaders, Movie Actors, Politicians andaru lechi namaskaram peduthunaru
Mass @PawanKalyan 🥵 pic.twitter.com/7PvAEVkeoP

— 𝘿𝙞𝙡𝙞𝙥𝙑𝙆18 (@Vk18xCr7) June 12, 2024

விளம்பரம்

இதேபோன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடையில், ஜூனியர் பாலையா என அழைக்கப்படும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா செய்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றது. அவர் தனது சகோதரியும், சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஷ்வரி நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார்.

Balayya ki kopam vachina thattukolemu prema vachina thattukolemu 😊
Konni kotla mandhi kallalo nillu thirigi untayi ee video chusaka ♥️❤️✨
One of the greatest moment happened today ❤️❤️‍🔥😍#NandamuriBalakrishna#NBK109#GodofMassesNBK#NaraChandrababuNaidupic.twitter.com/9h1Apbid2e

— Rebal Relangi 🐯 (@19dec2019) June 12, 2024

விளம்பரம்

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி 135 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

விளம்பரம்இதையும் படிங்க – விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை… மத்திய தேர்தல் ஆணையத்தில் விஜயபிரபாகர் மனு

இதையொட்டி இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
chandrababu
,
chiranjeevi sarja
,
Pawan Kalyan

You may also like

© RajTamil Network – 2024