Sunday, September 22, 2024

நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்.. அப்டேட்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்… ஓராண்டுக்கு நீட்டித்த மத்திய அரசு!நோயாளிகளின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்... ஓராண்டுக்கு நீட்டித்த மத்திய அரசு!

நோயாளிகளின் உடல்நலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA ID) உடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. மருத்துவமனைகள் ஒரு நோயாளிக்கு அவர்களின் உடல்நலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அதை ABHA ஐடிகளுடன் இணைப்பதற்கும் ரூ.20 பெறுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதற்கான விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து மத்திய அரசு கேட்டுள்ளது. டிஜிட்டல் ஹெல்த்கேர் சேவைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனை (ABDM) பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முடிவடைய இருந்தது.

விளம்பரம்

DHIS-ன் கீழ் வெளியிடப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதற்காக, மருத்துவமனைகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அல்லது நோயாளி நலன் தொடர்பான பிற செயல்பாடுகளுக்கு இவற்றைப் பயன்படுத்த உதவும் வகையில் NHA ‘incentive utilization guidelines’-ஐ வெளியிட்டுள்ளது. “உங்கள் மாநிலங்களின் வசதிகளின் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் நிரப்புவதற்கும், அத்தகைய பயன்பாட்டின் விவரங்களை எங்களுக்கு வழங்குவதற்கும் டிஜிட்டல் ஹெல்த் இன்சென்டிவ் ஷீம் பயன்பாட்டு வழிகாட்டுதல்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தகவல் தொடர்பு கூறுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இப்போது மருத்துவ வசதிகள் பதிவேட்டில் (HFR) பதிவு செய்யப்பட்ட அனைத்து சுகாதார வசதிகளான கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் டிஜிட்டல் தீர்வு நிறுவனங்கள் ரூ. 4 கோடி வரை ஊக்கத்தொகையைப் பெறலாம். இதுவரை நாடு முழுவதும் சுமார் 633 மில்லியன் ABHA ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடியை ஒவ்வொரு தனிநபருக்கும் தன்னார்வமாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும். NHA திட்டத்தின் செயல்திறனைக் கண்காணித்து மதிப்பீடு செய்கிறது மற்றும் அதன் தொடர்ச்சி, மாற்றம், வரவு செலவுத் திட்டம் குறித்து பொருத்தமான மாற்றங்களைச் செய்கிறது.

விளம்பரம்

இதுவரை, 34 கோடி ரூபாய் மருத்துவமனைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வசதி வளாகத்தில் இலவச வைஃபை, முறையான காற்றோட்டமான இருக்கை அமைப்பு, சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர், சுத்தமான குடிநீர் போன்ற மருத்துவமனை தொடர்பான எந்த வேலைக்கும் இந்த நிதியைப் பயன்படுத்த NHA மருத்துவமனைகளுக்கு ஃபிலெக்சிபிலிட்டியை வழங்கியுள்ளது.

Also Read |
குடும்பத்திற்கு ஒரே மகளா? மத்திய அரசின் மாதம் ரூ.35,000 வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா? தகுதி என்ன?

விளம்பரம்

“இப்போது மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு பணம் கிடைத்துள்ளதால், அந்த நிதியைப் பயன்படுத்தவும், அதன்படி அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Central govt
,
Centre

You may also like

© RajTamil Network – 2024