Saturday, September 21, 2024

பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

7வது ஊதியக்குழு : பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – இன்ப அதிர்ச்சி கொடுத்த மாநிலம்!மாதிரி படம்

மாதிரி படம்

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி, சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 7ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை மத்திய அமைச்சரவை உயர்த்தி ஒப்புதல் அளித்தது. ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்த இந்த அகவிலைப்படி உயர்வால், ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றனர். அத்துடன், HRAவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை எட்டியதால், 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே, 2026, ஜனவரி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
நடுத்தர மக்களுக்கு இனிப்பான செய்தி.. மோடி அமைச்சரவை முக்கிய முடிவு.. என்ன தெரியுமா?

இதனிடையே, சிக்கிம் அரசு ஜூலை 1, 2023 முதல் மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான இந்த கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால், சிக்கிம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.174.6 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
salary hike
,
Sikkim

You may also like

© RajTamil Network – 2024