Sunday, September 22, 2024

அதிரடியாக உயரப்போகும் அடிப்படை சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

8ஆவது ஊதியக்குழு.. அதிரடியாக உயரப்போகும் அடிப்படை சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?மாதிரி புகைப்படம்

மாதிரி புகைப்படம்

8வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் இதுவரை இல்லாத அளவுக்கு எகிறும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8ஆவது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அது எப்போது என்ற தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆணையம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும்.

விளம்பரம்

இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். கடந்த காலங்களில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வந்தது. 7ஆவது ஊதியக்குழு 2016 ஜனவரியில் அமலுக்கு வந்தது. இந்தியாவில் 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 26 வயதில் எம்.பி., 36 வயதில் மத்திய அமைச்சர் – யார் இந்த ராம் மோகன் நாயுடு?

விளம்பரம்

இவ்வாறு நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்க வாய்ப்புள்ளது. 8வது ஊதியக்குழுவில் பல்வேறு படிகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும் நிலையில், 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
government
,
Job

You may also like

© RajTamil Network – 2024