25 வயதில் MP – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த 3 இளம் பெண்கள்…

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

25 வயதில் மக்களவைக்கு தேர்வான பெண்கள்… இந்தியாவின் 3 இளம் எம்.பி.-க்கள் இவர்கள்தான்….இளம் எம்.பி.க்கள்

இளம் எம்.பி.க்கள்

மிகக்குறைந்த வயதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவையே 3 இளம் பெண்கள் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 25 வயதில் அவர்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிட தக்கது.

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 25 வயதாகும் பிரியா சரோஜ், சாம்பவி சவுத்ரி மற்றும் சஞ்சனா ஆகியோர் எம்பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

விளம்பரம்

பெரும்பாலான பெண்கள் கல்லூரி முடித்து உயர்கல்விக்கு செல்லும் அல்லது பணிக்கு செல்லும் வயதில் இவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பவி சவுத்ரி

பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் அசோக் சவுத்ரியின் மகள்தான் இந்த சாம்பவி சவுத்ரி. இவர் பீகாரின் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்காக பரப்புரை மேற்கொண்டபோது பிரதமர் மோடி குறைந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்காக இவரை வெகுவாக பாராட்டியிருந்தார்.

சஞ்சனா ஜாதவ்

ராஜஸ்தானின் பாரத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சஞ்சனா ஜாதவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

விளம்பரம்

முன்னதாக இவர் 2023 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இருப்பினும் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். இவரது கணவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார்.

பிரியா சரோஜ்

உத்தரப்பிரதேசத்தின் மச்லிசார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்ட பிரியா சரோஜ் 35 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் சிட்டிங் எம்.பி. போலாநாத்தை தோற்கடித்தார்.

இவர் 3 முறை எம்பியாக இருந்த தூஃபானி சரோஜின் மகள் ஆவார்.

இதையும் படிங்க – இந்தியாவின் டாப் 7 பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?விளம்பரம்

புஷ்பேந்திர சரோஜ்

உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி நாடாளுமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு, பாஜக எம்.பி. வினோத் குமாரை 1,03,944 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இவர் உத்தரப்பிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராவும் இருந்த இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவார். இவருக்கு 25 வயது ஆகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
IPL 2024
,
Parliament Election 2024

You may also like

© RajTamil Network – 2024