Friday, September 20, 2024

நடிகர் விஜய் பிறந்தநாள்: ‘கோட்’ படத்தின் ஷார்ட்ஸ் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு – ரசிகர்கள் கொண்டாட்டம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

'கோட்' படத்தின் 2வது பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் 2வது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது.

இந்த சூழலில் 'கோட்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தளபதி விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா..?. அனைவரையும் இரவு 12.01க்கு சந்திக்கிறோம்', என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'கோட்' படத்தின் ஷார்ட்ஸ் வீடியோ ஒன்றை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தி கோட்' விஜய் அண்ணா, லவ் யு அண்ணா.. நாளை சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள கோட் படத்தின் ஷார்ட்ஸ் வீடியோவை, நடிகர் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Happy birthday to THE GOAT @actorvijay na
Love u na❤️❤️❤️
See you tomorrow #GOATBdayShots#HBDThalapathyVijay
▶️ https://t.co/2nU9JXiaae@actorvijay sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@Ags_production…

— venkat prabhu (@vp_offl) June 21, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024