Friday, September 20, 2024

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு இடையே புதிய சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

புதுடெல்லி,

நெட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் இது பெரும் நெருக்கடியாக அமைந்துவிட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான மசோதா கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு நேற்று அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் படி நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் ரூ1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.

You may also like

© RajTamil Network – 2024