Friday, September 20, 2024

ஓடும் ரயிலில் ஐபோனை தொலைத்த இளைஞர்… பின்பு என்ன செய்தார் தெரியுமா..?

by rajtamil
Published: Updated: 0 comment 31 views
A+A-
Reset

ஓடும் ரயிலில் ஐபோனை தொலைத்த இளைஞர்… பின்பு என்ன செய்தார் தெரியுமா..?பாலத்தின் மீது ஏறி நிற்கும் இளைஞர்

பாலத்தின் மீது ஏறி நிற்கும் இளைஞர்

சமீபத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ரூப்நாராயன் ஆற்றின் மீதுள்ள ரயில்வே பாலத்தின் மீது ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பிரச்சனை காரணமாக தெற்கு ரயில்வேயின் ஹவுரா காரக்பூர் பிரிவில் ஓடும் ரயில்களின் சேவைகள் அனைத்தும் மூன்று மணி நேரம் தடங்கலாகின. இந்த சம்பவம் நடந்த இடம் மேற்கு வங்காளத்தின் பூர்பா மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள கோலகட் ரயில்வே நிலையமாகும். தனது ஐபோனை தொலைத்து விட்டதாகவும், அதை மீட்டு தரும்படி கேட்டே பாலத்தின் மீது ஏறி நின்றுள்ளார். ஒருவழியாக எப்படியோ மூன்று மணி நேரம் போராடி உள்ளூர்காரர்கள் இவரை பத்திரமாக மீட்டனர். ஆனால் இவரை பாலத்திலிருந்து கீழே இறக்குவதற்கு பயன்படுத்திய கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்ததால், அதைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரும் நிலை தடுமாறி ஆற்றுக்குள் குதித்தார்.

விளம்பரம்

உடலில் சிறு காயங்களோடு காப்பாற்றப்பட்ட அந்த இளைஞர் தற்போது பாக்பாரி கிராம மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உயிரோடு மீட்ட பிறகே ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இவை அனைத்தையுமே வீடியோ எடுத்த ஒருவர், அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மெகெடா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதாவது இந்த இளைஞர் ஹவுராவிலிருந்து ஆத்ரா செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது கோலகட் ரயில் நிலையம் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, ரூப்நாராயன் ஆற்றில் ரயில் பயணித்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் ரயிலிலிருந்து இறங்கிய அவர், ரயில்வே பாலத்தின் மீது அமர்ந்துவிட்டார். அங்குள்ள மற்ற பயணிகள் கேட்டதற்கு தன்னிடமிருந்த ஐபோனை காணவில்லை, அதை தேடப்போகிறேன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்

பார்ப்பதற்கு மனநிலை சரியில்லாதவர் போல் தெரிந்த அந்த இளைஞர், சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரயில்வே பலத்தின் மீது ஏறி நின்று கொண்டார். ஒருவேளை அந்த நபர் மதுபோதையில் இருக்கலாம், அதனால்தான் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கு தெரியமல் இருக்கிறதோ என்னவோ என வீடியோவை பார்க்கும் நமக்கு தோன்றுகிறது. அவர் ஒரு அடி தவறாக எடுத்து வைத்தாலும் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை.

ஒருவழியாக ஆற்றிலிருந்து மீட்ட இளைஞருக்கு உடல் முழுவதும் காயம் பட்டிருந்தது. சில நபர்கள் அந்த காயங்களை சுத்தம் செய்து அவரை அங்கிருந்து பத்திரமாக தூக்கிச் சென்றனர். இந்த நபர் செய்த பிரச்சனையால் பல மணி நேர காத்திருப்புக்கு உள்ளான பயணிகள் பலர் தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Railway
,
southern railway

You may also like

© RajTamil Network – 2024