நாளை கூடுகிறது 18-ஆவது மக்களவை கூட்டத்தொடர்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

அடுத்த மக்களவை சபாநாயகர் யார்? – நாளை தொடங்கும் கூட்டத்தொடர்நாளை கூடுகிறது மக்களவை

நாளை கூடுகிறது மக்களவை

18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (நாளை) தொடங்க உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், 234 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சிகளாக மக்களவையில் இந்தியா கூட்டணி அமருகிறது.

இந்தச் சூழலில், 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கட்கிழமை தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவுள்ளது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் பா்த்ருஹரி மகதாப் பதவிபிராமாணம் செய்து வைக்க உள்ளார்.

விளம்பரம்

அதன் பிறகு, ஜூன் 26 மக்களவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது. இதேபோல், மாநிலங்களவையின் 264 ஆவது அமா்வு ஜூன் 27 தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27 இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உரையாற்றவுள்ளாா்.

இதையும் படிக்க:
கட்டி முடிக்கும் முன்பே இடிந்து தரைமட்டமான பாலம்.. அதிர்ச்சி வீடியோ!

இதற்கிடையே, மக்களவை இடைக்கால தலைவருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினா் பதவியை நிராகரிக்க திமுகவின் டி.ஆா். பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

8 முறை எம்.பி.யான காங்கிரசின் சுரேஷுக்கு பதிலாக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப், மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok sabha
,
Parliament Session
,
President Droupadi Murmu
,
Rajya Sabha

You may also like

© RajTamil Network – 2024