Friday, September 20, 2024

அதர்வா நடித்துள்ள ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் நெல்சன் வெங்கடேசன் தற்போது நடிகர் அதர்வா நடிப்பில் 'டிஎன்ஏ' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குனர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024