Friday, September 20, 2024

நீட் கேள்வித்தாள் லீக்கான சர்ச்சை.. மோசடியை அரங்கேற்றிய ‘சால்வர் கேங்’

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

NEET Scam : நீட் கேள்வித்தாள் லீக்கான சர்ச்சை.. மோசடியை அரங்கேற்றிய ‘சால்வர் கேங்’ – சிபிஐ விசாரணை!நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வு கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை, சிறப்பு போலீஸ் படை அதிரடியாக கைது செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது.

இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

விளம்பரம்

குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே கேள்வித்தாள் கிடைத்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரவி அத்ரி என்பவர், நீட் கேள்வித்தாளை லீக் செய்தது அம்பலமானது.

விளம்பரம்

சனிக்கிழமை நொய்டா அருகே நீம்கா கிராமத்தில் பதுங்கியிருந்த ரவி அத்ரியை உத்தர பிரதேச சிறப்பு போலீஸ் படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். நீட் கேள்வித்தாள் கசிய விடப்பட்டதில் ரவி அத்ரி, மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : ஆபாச படத்திற்கு அடிமையான தந்தை… பெற்ற மகளுக்கு செய்த கொடூர செயல்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

தேர்வுக்கு முதல்நாள் உத்தர பிரதேசத்தில் கசிய விட்ட நீட் கேள்வித்தாள், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. லட்சங்களில் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு சால்வர் கேங் மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும் மாணவர்களை தேர்வுக்கு முந்தைய நாள் ஒரே இடத்தில் தங்க வைத்து கேள்வித்தாள் கொடுக்கப்படும். அப்போது, கேள்விக்கான விடைகளையும் தயார் செய்து கொடுத்து, தேர்வுக்கு தயார் செய்யப்படுவர்.

விளம்பரம்

ரவி அத்ரியின் இந்த ஃபார்முலா டைப் மோசடி தான் ‘சால்வர் கேங்’ என அழைக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் மருத்துவம் பயின்ற ரவி அத்ரி,
நான்காம் ஆண்டு தேர்வை எழுதாமல் பாதியில் படிப்பை கைவிட்டதாக கூறப்படுகிறது. தேர்வு கேள்வித்தாள் கசிய விடும் கும்பலுடன் ரவி அத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கேள்வித்தாள் மோசடியில் லட்சங்கள் புரளுவதை அறிந்து மருத்துவ படிப்பையே ரவி கைவிட்டுள்ளார். ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் காவலர் தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2012 இல் மருத்துவ நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் மோசடி மற்றும் 2015 இல் எய்ம்ஸ் முதுநிலைத் தேர்வு கேள்வித்தாளை லீக் செய்த வழக்கிலும் சிறை சென்றது தெரியவந்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க:
தக்காளி விலை கிடுகிடு உயர்வு… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – பொதுமக்கள் அதிர்ச்சி!

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வு முறைகேடு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ரவி அத்ரி, தற்போது நீட் தேர்வு கேள்வித்தாளை கசிய விட்டதில் வசமாக சிக்கியுள்ளார்.இவருக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், முக்கியப் புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே, பிகாரில் உள்ள மையங்களில் நீட் தேர்வெழுதிய 17 மாணவர்களை தகுதிநீக்கம் செய்து, தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Neet Exam
,
NEET Result

You may also like

© RajTamil Network – 2024