Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை: இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் எந்த அணிக்கு சாதகம்..?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோத உள்ளது.

செயின்ட் லூசியா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவே குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

ஏனெனில் இந்தியா வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி அரையிறுதிக்கு முன்னேறும். அதேவேளை தோல்வியடைந்தால் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் -வங்காளதேசம் ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிருக்கும். இருப்பினும் இந்தியாவுக்கு ரன்ரேட் நல்ல நிலையில் இருப்பதால் அரையிறுதி செல்ல வாய்ப்பு அதிகம்.

அதே நேரம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். தோல்வியடைந்தால் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தின் முடிவை பொறுத்தே அந்த அணியின் தலைவிதி அமையும்.

இத்தகைய சூழலில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்டம் நடைபெற உள்ள எஸ்டி. லூசியா பகுதியில் மழை பெய்வதற்கு 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், அது எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து முழு விவரம் பின்வருமாறு:-

மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதன் மூலம் ஏற்கனவே 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி கூடுதலாக ஒரு புள்ளி பெற்று அந்த பிரிவில் முதலிடத்தை உறுதி செய்வதுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்று விடும்.

மறுபுறம் ஆஸ்திரேலியா பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை இதன் மூலம் 3-ஆக உயரும் . அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி மொத்தமாக நான்கு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறும். அதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலியா வெளியேற நேரிடும். ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் . என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024