Saturday, September 21, 2024

மழையால் நிறுத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மீண்டும் தொடக்கம்… ஓவர்கள் குறைப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

மழை காரணமாக நிறுத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்று வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது மழை நின்றதையடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மழை குறுக்கிட்டு போட்டி நேரம் தடைபட்டதால், இந்த ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தென் ஆப்பிரிக்கா 2 ஓவர்கள் முடிவில் 15 ரன்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் 15 ஓவர்களில் 108 ரன்கள் அடித்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்ரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024