ஏஐ பாலியல் பொம்மைகள்: சீனாவில் அதிகரிக்கும் ஆர்வம்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஏஐ பாலியல் பொம்மைகள்: சீனாவில் அதிகரிக்கும் ஆர்வம்!சீனா புத்தாக்க தொழில்நிறுவனங்கள் ஏஐ பாலியல் பொம்மைகள் வடிவமைப்பில் ஆர்வம் காட்டுகின்றனஸ்டார்பெரி எக்ஸ் பக்கம்ஸ்டார்பெரி எக்ஸ் பக்கம்

சீனாவில் செயற்கை தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட பாலியல் பொம்மைகள் உருவாக்கத்தில் புத்தாக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

செளத் சீனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள், செய்யறிவு பொருத்தப்பட்ட ஏஐ பாட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அதிகம் பணம் சம்பாதிக்க இயலும் இந்த துறையில் முந்தைய பாலியல் பொம்மைகள் தயாரிப்பாளர்களும் ஏஐ பக்கம் சாய்ந்து வருவதையும் பார்க்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷென்சென்னை சேர்ந்த ஸ்டார்பெரி டெக்னாலஜி, பாலியல் பொம்மைகள் உருவாக்கத்தில் முன்னணியில் உள்ள நிறுவனம். பேச்சளவிலும் செயலளிவிலும் பயனர்களோடு உரையாடும் ஏஐ உதவியாளர்களை இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

ஸ்டார்பெரியின் சிஇஓ இவான் லீ, அடுத்த தலைமுறை பாலியல் பொம்மைகள் பேசும்வகையிலும் தொடுதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுவதாகவும் ஆகஸ்ட் 2024-ல் இவற்றின் மாதிரிகள் தயாராகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியான அனுபவத்தை ஏஐ ரோபோக்கள் மூலம் பயனர்களுக்கு அளிக்க இந்த நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.

பேட்டரி கொள்ளளவு, மனித தசைகளின் தளர்வை ரோபாக்களில் கொண்டுவருதல் உள்ளிட்ட சாவல்கள் ஒருபக்கம் மற்றொரு புறம் தார்மிக சிக்கல்கள் எழுகின்றன.

மனிதர்களுடனான உறவுமுறைகளையே இது பாதிக்கும் எனவும் தீங்கிழைக்கும் வழக்கங்களை இவை உருவாக்கலாம் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் , இந்த ஏஐக்களை சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவருவதும் புதிய பிரச்னையாக உருவாகும். எனினும் ஏஐ ஆர்வம் அதிகரித்து வருவதால் நடைமுறைக்கு சாத்தியமாகும் தூரம் தொலைவில் இல்லை.

You may also like

© RajTamil Network – 2024