பிணை மனுக்கள் அவசியமின்றி ஒத்திவைக்கப்படக் கூடாது: உச்ச நீதிமன்றம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பிணை மனுக்கள் அவசியமின்றி ஒத்திவைக்கப்படக் கூடாது: உச்ச நீதிமன்றம்பிணை மனுக்கள் தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவுஉச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

புது தில்லி; பிணை மனுக்கள் மீதான விசாரணை தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது அடுத்த விசாரணையின்போது முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆத் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனு மீது ஜூலை 9ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யும்போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தது.

ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அவசியமின்றி ஒத்திவைக்கப்படக் கூடாது, அடுத்த விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் இது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனு வரும் ஜூலை 9ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024