Saturday, September 21, 2024

போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதவது;

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது. ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை. தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம். வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை.

ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான். உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா? போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்."

இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024