வேகம் குறைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்… காரணம் என்ன ?!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

வேகம் குறைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்… காரணம் என்ன ?!வந்தே பாரத்

வந்தே பாரத்

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் இந்திய ரயில்வே விரைவில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிரீமியம் ரயில்களின் வேகத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது இருக்கும் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோ மீட்டர் வேகமாக குறைக்க முடிவு செய்துள்ளது.

குறிப்பாக டெல்லியில் இருந்து ஜான்சி செல்லும் டெல்லி கதிமான் எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து கஜுராஹோ செல்லும் டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகத்தையும், டெல்லியில் இருந்து ராணி கமலாபதி செல்லும் டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் டெல்லியில் இருந்து ராணி கமலாபதி செல்லும் டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகத்தையும் குறைக்க வட மத்திய ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

விளம்பரம்

குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதால், அதன் இயக்க நேரம் சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் வரை அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொப்பை கொழுப்பைக் குறைக்க 7 சிறந்த வயிற்றுப் பயிற்சிகள்.!
மேலும் செய்திகள்…

அண்மையில் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தின் எதிரொலி மற்றும் நாடு முழுவதும் அதிகரித்து வரும் ரயில் விபத்துக்களை கருத்தில் கொண்டு முக்கிய விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Train
,
Vande Bharat

You may also like

© RajTamil Network – 2024