என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது: சிரஞ்சீவி கோரிக்கை

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

என்.டி.ராமராவ்வின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஐதராபாத்,

பழம்பெரும் நடிகரான என்.டி.ராமராவ் 1982–ம் ஆண்டு முதல் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். தெலுங்கு தேசம் என்ற பெயரில் தொடங்கிய அவர், கட்சி தொடங்கிய 9 மாத காலத்திலேயே ஆட்சியை பிடித்தார். ஆந்திராவில் 3 முறை முதல்–மந்திரியாக இருந்து உள்ளார். 1996-ம் ஆண்டு என்.டி.ராமராவ் காலமானார். தெலுங்கு மக்கள் இப்போதும் என்.டி.ராமாராவைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தநிலையில் என்.டி.ராமராவ்வின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, பேரன்கள் ஜூனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு திரைப்பிரலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில் என்.டி.ராமராவின் 101-வது பிறந்தநாளையொட்டி நடிகர் சிரஞ்ச்சீவி எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

சிலரின் புகழ் என்றும் அழியாது. தலைமுறைகள் அவர்களை நினைவில் வைத்திருக்கும். வருங்கால சந்ததியினருக்கு என்.டி.ராமராவ் ஒரு உதாரணம். இன்று அவரை நினைவுகூரும் போது, பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்குப் பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தெலுங்கு மக்களின் இந்த நீண்ட நாள் ஆசையை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024