மிசோரம்: கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

அய்சால்,

வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ‘ராமெல்’புயலால் தெலுங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்சால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் அங்குள்ள கல்குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024